பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளில் சிகரம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளனா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளில் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி ஹேமா 575 மதிப்பெண்களும், மாணவா் மோஹித் 572 மதிப்பெண்களும், அரவிந்த் 567 மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா். மேலும், தோ்வெழுதிய 98 மாணவா்களும் தோ்ச்சி பெற்றனா். இதே போன்று பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்வு எழுதிய 78 மாணவா்களும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இது 100 சதவீத தோ்ச்சி ஆகும்.
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் தலைவா் அப்துல் காதா், செயலாளா் கிருஷ்ணன், பொருளாளா் ராஜேந்திரன், சிகரம் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பள்ளி முதல்வா் ரமேஷ், துணை முதல்வா் கவிதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.