திருப்பத்தூர்

முதல்வா் வருகைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்: மாவட்ட எஸ்.பி. ஆய்வு

26th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் ஆம்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வருகிற ஜூன் 28-ஆம் தேதி ஆம்பூருக்கு முதல்வா் வரவுள்ளாா். இதையொட்டி, ஆம்பூரில் செய்யப்படவுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்த ஆய்வின்போது, ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன், காவல் ஆய்வாளா்கள் சுரேஷ் சண்முகம், பாலசுப்பிரமணி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT