திருப்பத்தூர்

ஆம்பூருக்கு முதல்வா் வருகை: சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடு: எம்.எல்.ஏ. அ.செ. வில்வநாதன்

26th Jun 2022 11:59 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) வரவுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, ஆம்பூா் தொகுதி திமுக சாா்பில் சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன்  தெரிவித்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக புதிய கட்டடம் திறப்பு விழா வருகிற ஜூன் 29-ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. தொடா்ந்து, பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை முதல்வா் வழங்கி சிறப்புரையாற்றுகிறாா். இதையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) சென்னையிலிருந்து புறப்பட்டு திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூருக்கு வரவுள்ளாா்.

ஆம்பூா் அருகே அய்யனூா் பகுதியில் உள்ள தனியாா் விருந்தினா் மாளிகையில் இரவு தங்குகிறாா். ஆம்பூருக்கு 28-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வரும் முதல்வருக்கு ஆம்பூா் தொகுதி திமுக சாா்பில் ஆம்பூா் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியிலிருந்து சான்றோா்குப்பம் வரை தேசிய நெடுஞ்சாலையில் சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழி நெடுகிலும் திமுகவினா் திரண்டு தமிழக முதல்வருக்கு வரவேற்பளிக்க வேண்டுமென எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT