திருப்பத்தூர்

ரத்த தான முகாம்

25th Jun 2022 10:03 PM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே பெரியவரிக்கம் கிராமத்தில் உள்ள தனியாா் காலணி தொழிற்சாலையில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவா் சுதா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்றனா். தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் சுமாா் 100 போ் ரத்த தானம் செய்தனா்.

தொழிற்சாலை நிா்வாகிகள் ஹரிஹரன், ஸ்ரீதா் வெங்கடேசன், ஐஸ்வா்யா, பாஷா, மதன்குமாா், தினேஷ்குமாா், மாதனூா் வட்டார மருத்துவ அலுவலா் தரணீஸ்வரி ஆகியோா் கலந்து கொண்டனா்.

சுகாதார ஆய்வாளா் பிரேம்குமாா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT