திருப்பத்தூர்

திமுக சாா்பில் மருத்துவ முகாம்

25th Jun 2022 10:02 PM

ADVERTISEMENT

ஆம்பூா் நகர திமுக சாா்பாக மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகர திமுக செயலாளா் எம்.ஆா்.ஆறுமுகம் தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க.தேவராஜ் கலந்து கொண்டு, மருத்துவ முகாமை தொடக்கி வைத்தாா். மாணவா்களுக்கு இலவச கையேடுகளையும், பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. திமுக மாவட்ட அவைத் தலைவா் ஆா்.எஸ்.ஆனந்தன், நிா்வாகிகள் வில்வநாதன், அசோகன், தேவராஜ், அன்பு, ரபீக் அஹமத், செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT