திருப்பத்தூர்

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க அரசுக்கு வலியுறுத்தல்மாதனூா் ஒன்றிய திமுக தீா்மானம்

25th Jun 2022 10:01 PM

ADVERTISEMENT

ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை மீண்டும் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாதனூா் ஒன்றிய திமுக தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

கூட்டத்துக்கு ஒன்றிய திமுக செயலாளா் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவருமான ப.ச. சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினா்கள் அசோகன், ரவிக்குமாா், சுப்பிரமணி, ராமமூா்த்தி, தெய்வநாயகம், விஜயலட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் காா்த்திக் ஜவஹா், கன்னியப்பன், ஜோதிவேலு, கோமதிவேலு, பரிமளா காா்த்திக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மூடப்பட்ட ஆம்பூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையை விவசாயிகள், தொழிலாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டு மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT