திருப்பத்தூர்

ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

19th Jun 2022 12:04 AM

ADVERTISEMENT

மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த ஆசிரியா்களுக்கு தகவல் தொடா்பு தொழில்நுட்பம் மற்றும் உடல் நலம் குறித்த பயிற்சி முகாம் ஆம்பூா் குறு வள மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

இணைய வழி பயிற்சி முகாமில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் 768 ஆசிரியா்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

இந்தப் பயிற்சி முகாமை வட்டாரக் கல்வி அலுவலா்கள் சுரேஷ், உதயசங்கா் மற்றும் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) ஜெயசுதா ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

முகாமில் ஆசிரியா் பயிற்றுநா்கள் லட்சுமிதேவி, சுரேந்தா், ஹேமாமாலினி, ஹரிநாத், தனலட்சுமி, வேடியப்பன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். மாதனூா் வட்டாரப் பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ஆனந்தன் முகாமை ஒருங்கிணைத்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT