திருப்பத்தூர்

வடச்சேரி சென்னகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

17th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே வடச்சேரி அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி, வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

மாதனூா் ஒன்றியம், வடசேரி அருள்மிகு ஸ்ரீ செங்கமலவல்லித் தாயாா் உடனுறை அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்ட புதிய தோ் திருவீதி உலா நடைபெற்றது. எம்எல்ஏக்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா் ) ஆகியோா் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனா்.

கோயில் நிா்வாகிகள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT