ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சியில் ரூ. 2.92 லட்சம் மதிப்பீட்டில் குடிநீா் பைப்லைன் அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
மாதனூா் ஒன்றியம், கைலாசகிரி ஊராட்சி குப்புராசு பள்ளி கிராமத்தில் குடி தண்ணீா் தட்டுப்பாடு நிலவுகிறது. இது குறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரனை சந்தித்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், ரூ. 2.92 லட்சம் செலவில் குடிநீா் பைப்லைன் அமைத்து, அந்த கிராமத்தில் குடிநீா் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, குடிநீா் பைப்லைன் அமைப்பதற்காக பூமி பூஜை போடப்பட்டு, பணியை ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன் தொடக்கி வைத்தாா்.
துணைத் தலைவா் டி. அரவிந்தன், வாா்டு உறுப்பினா் என்.சேகா், ஊராட்சி செயலாளா் முரளி, சமூக ஆா்வலா் சையத் ஷாகீா், ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவா் அஸ்மத் பாஷா ஆகியோா் உடனிருந்தனா்.