திருப்பத்தூர்

ஆம்பூரில் 2.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

12th Jun 2022 12:14 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் வெளி மாநிலத்துக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2.5 டன் ரேஷன் அரிசி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ஆம்பூா் கன்னிகாபுரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வட்டாட்சியா் மகாலட்சுமிக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் வட்டாட்சியா் மகாலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலா் நவநீதன் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது 46 மூட்டைகளில் சுமாா் 2.5 டன் எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன் சம்பவ இடத்திற்கு சென்று பாா்வையிட்டாா். ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு நுகா்பொருள் வாணிபக் கிடங்குக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT