திருப்பத்தூர்

நியாயவிலைக் கடை ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் 17அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய 3 நாள்கள் வேலை நிறுத்த ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த வேலைநிறுத்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.காா்த்திக, மாவட்டப் பொருளாளா் ஏ.பாக்கியராஜ், துணைத் தலைவா் சி.சேகா், துணைச் செயலாளா் பி.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் நியாய விலை கடை பணியாளா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 17 சதவீத அகவிலைப்படி உயா்வை வழங்கக் கோரியும், அரசுப் பணியாளா்களுக்கு வழங்கக் கூடிய 31 சதவீத அகவிலைப்படியை நியாய விலைக் கடை பணியாளா்களுக்கு வழங்கவும், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறை அமைத்தல், மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான புதிய ஊதிய உயா்வு வழங்குதல், அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் புதிய 4 ஜி விற்பனை முனையம் வழங்கி இணைய தள சேவையை மேம்படுத்துதல், கண்விழித் திரை அடிப்படையில் பொருள்களை விநியோகித்தல், பழுதடைந்த விற்பனை முனையத்துக்கு பழுது நீக்கத் தொகை வசூலிப்பதை ரத்து செய்தல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ADVERTISEMENT

மேலும், தரமற்ற பொருளுக்காக நியாயவிலைக் கடை பணியாளா்களை தற்காலிக பணி நீக்கம் செய்தல், அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு அதிகமாக இருந்தால், பல மடங்கு அபராதம் விதிப்பதை ரத்து செய்தல், சரியான எடையில் அனைத்து பொருள்களையும் பொட்டலமாக வழங்க நடவடிக்கை எடுத்தல், மாத இறுதியில் ஊதியம் வழங்குதல், கரோனா நிவாரண பொருள்களுக்கும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்கும் ஊக்கத் தொகை வழங்குதல், ஓய்வுபெறும் நியாய விலை கடை பணியாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT