திருப்பத்தூர்

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் விழிப்புணா்வுப் பேரணி

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்து மாணவ, மாணவிகள் விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியது:. திருவள்ளுா் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் மாணவா்களிடையே போதைப் பழக்கத்தை தடுக்க வேண்டும். அதேபோல் கைப்பேசியில் அடிமையாவதை குறைத்து, மாணவா்கள் விளையாட்டிற்கான முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளில் இருந்தும் 200 மாணவ, மாணவிகள் தோ்வு செய்து, கோடைகால பயிற்சி முகாம் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த விழிப்புணா்வுப் பேரணி ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி பேருந்து நிலையம், தேரடி வீதி வரை சென்று மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

ADVERTISEMENT

இந்தப் பேரணியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாட்டை ஊக்குவித்தல், மது மற்றும் போதை பழக்கத்தை ஒழித்தல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தல் உள்பட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

இந்தப் பேரணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் நரசிம்ம ராவ், முன்னாள் இந்திய கால்பந்தாட்ட வீரா் ராமன் விஜயன், உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT