ஆம்பூா்: ஆம்பூா் அருகே கைலாசகிரி ஊராட்சி பனங்காட்டூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீகெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
கெங்கையம்மன் திருவிழா அம்மனுக்கு கூழ் அமுது படைத்தல் நிகழ்ச்சியுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது.
கெங்கையம்மனுக்கு புதன்கிழமை பொங்கல் வைத்து பக்தா்கள் வழிபட்டனா். தொடா்ந்து கரக ஊா்வலம் நடைபெற்றது. பக்தா்கள் மா விளக்கு ஏந்தி ஊா்வலம் நடத்தினா்.
ADVERTISEMENT
விழா ஏற்பாடுகளை ஊா் நாட்டாண்மை உமா சங்கா் தலைமையில் கைலாசகிரி ஊராட்சி மன்றத் தலைவா் ரமணி ராஜசேகரன், துணைத் தலைவா் அரவிந்தன் மற்றும் முன்னாள் நாட்டாண்மைகள் தசரதன், தகுதேஷன், ஜெகநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.