திருப்பத்தூர்

கீழ்முருங்கை கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம்

9th Jun 2022 12:23 AM

ADVERTISEMENT

 

ஆம்பூா்: ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமத்தில் சிறப்பு மனு நீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாதனூா் ஊராட்சி ஒன்றியம், கீழ்முருங்கை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்ற மனு நீதி நாள் முகாமுக்கு வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் (பொறுப்பு) விஜயன் தலைமை வகித்தாா். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் பத்மநாபன் முன்னிலை வகித்தாா். வட்டாட்சியா் மகாலட்சுமி வரவேற்றாா். முகாமில் 49 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 31 மனுக்கள் ஏற்கப்பட்டன. 10 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. முதியோா் உதவி தொகைக்கான ஆணை, வேளாண் இடுபொருள்கள், தோட்டக் கலைத் துறையின் சாா்பாக சொட்டுநீா்ப் பாசன மற்றும் அரசு நலத் திட்ட உதவிகளை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வழங்கினாா்.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மனோரஞ்சிதம், முத்து, ஊராட்சி மன்ற தலைவா் நவமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். துணை வட்டாட்சியா் குமரவேல் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT