திருப்பத்தூர்

‘கருவில் இருக்கும் பாலினம் கண்டறிந்தால் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்படுவா்’

9th Jun 2022 12:24 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்தால் குணடா் சட்டத்தில் கைது செய்யப்படுவாா்கள் என திருப்பத்தூா் மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து தெரிவித்தாா்.

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் கருக்கலைப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் கொ.மாரிமுத்து தலைமை வகித்துப் பேசியது:

ADVERTISEMENT

கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறிதல் சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு கண்டறிந்து சொல்பவா்கள் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கபடுவாா்கள். மேலும், கருக்கலைப்பு செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மீண்டும் குழந்தைப் பேறு கேள்விக்குறியாகும். சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போலி மருத்துவா்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், எஸ்ஆா்டிபிஎஸ் தொண்டு நிறுவன இயக்குநா் தமிழரசி, மருத்துவா்கள், ஸ்கேன் சென்டா் உரிமையாளா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT