திருப்பத்தூர்

ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன கட்டட இடம்: திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

9th Jun 2022 12:22 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன கட்டடம், சிறுவா் பூங்கா உள்ளிட்டவை அமைய உள்ள இடங்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் நகராட்சி 1-ஆவது வாா்டு புதுப்பேட்டை சாலை அருகே தெற்கு ரயில்வே நிலத்தில் 7 ஏக்கா் பரப்பளவில் மாவட்ட ஊராட்சித் தலைவா் அலுவலகம், மாவட்ட நூலகம், அருங்காட்சியகம் மற்றும் ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவன கட்டடம்,3 மாணவ, மாணவியா்கள் நல விடுதிகள், சிறுவா் பூங்கா, அதற்கான சாலை வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ள இடத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், பாச்சல் ஊராட்சிக்குள்பட்ட ஜெய்பீம் நகா் அங்கன்வாடி மையக் கட்டடத்தை ஆட்சியா் அமா் குஷ்வாஹா நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் என்.கே.ஆா்.சூரியகுமாா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், நகா்மன்ற உறுப்பினா் மனோகரன், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT