வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற தொழிலாளி ரயில் மோதியதில் உயிரிழந்தாா்.
வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (42). கம்பி கட்டும் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா். அப்போது ஜோலாா்பேட்டையிலிருந்து காட்பாடி நோக்கிச் சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா், சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.