திருப்பத்தூா் மாவட்டத்தில் 51 கிராம ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) வேளாண் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என வேளாண் இணை இயக்குதா் கி.ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்டத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ், 2021-ஆம் ஆண்டில் தோ்வு செய்யப்பட்ட 51 கிராம ஊராட்சிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) வேளாண் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
100 சதவீத மானியத்தில் பண்ணைக் குட்டை அமைத்தல், 70 சதவீத மானியத்தில் சூரிய சக்தி பம்ப் செட் அமைத்தல் உள்ளிட்ட இதர மானியத் திட்டங்கள் இந்த 51 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது.
மேலும், இந்த முகாம்களில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுக்க, நுண்ணீா் பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், சிறு/குறு விவசாய சான்றிதழ் வழங்குதல், விவசாயக் கடன் அட்டைகள் வழங்க விண்ணப்பம் பெறுதல், கால்நடைகளுக்களுக்கான சிறப்பு முகாமும் நடத்தப்படவுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.