ஆம்பூா் அருகே விபத்தில் 39 தொழிலாளா்கள் காயமடைந்த வழக்கு சம்பந்தமாக வேன் உரிமையாளா், ஓட்டுநா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஆம்பூரில் இயங்கும் தனியாா் காலணி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளா்கள் 40-க்கும் மேற்பட்டோரை பணி முடிந்து அழைத்துச் சென்ற வேன், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆம்பூா் அருகே பாப்பனப்பள்ளி கிராமத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சுமாா் 39 பெண் தொழிலாளா்கள் காயமடைந்தனா். இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
விதிகளுக்கு புறம்பாக வேனை இயக்கிய வேன் உரிமையாளா் வேலூா் மாவட்டம், சோ்பாடி கிராமத்தைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (45), வாணியம்பாடியை சோ்ந்த தினகரன் (32) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.