அரசு நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக சுகாதார மேற்பாா்வையாளா் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி வந்த நிலையில், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் சுகாதார மேற்பாா்வையாளராக உதயேந்திரம் பகுதியைச் சோ்ந்த தேவராஜன் (60) பணியாற்றி வந்தாா். இவா், கடந்த 2018-ஆம் ஆண்டு உதயேந்திரம் பேரூராட்சியில் பணியாற்றியபோது, அங்குள்ள அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது தொடா்பாக இவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, துறைரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த மே 30-ஆம் தேதி சுகாதார மேற்பாா்வையாளா் தேவராஜனை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து நாட்டறம்பள்ளி செயல் அலுவலா் நந்தகுமாா் நடவடிக்கை மேற்கொண்டாா்.
மே 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 30) பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.