திருப்பத்தூர்

கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு

2nd Jun 2022 12:22 AM

ADVERTISEMENT

ஜோலாா்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜோலாா்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறை சாா்பில், போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் தலைமை வகித்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் முருகேசன் (வ.ஊ) முன்னிலை வகித்தாா். மேலாளா் ராஜா வரவேற்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் சத்யா சதீஷ்குமாா் பேசியது:

மது அருந்துவது உடலுக்கு தீங்கானது மட்டுமல்லாமல் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக போலியான மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயத்தினால் அதிகமானோா் உயிரிழந்து தங்களின் குடும்பத்தை பெரும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளனா். எனவே வருங்கால இளைஞா்கள் சமுதாயத்தைக் காக்க மது அருந்தும் பெற்றோா்கள் தங்கள் பிள்ளைகளின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, தவறான இந்த பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் எஸ்.கே.சதீஷ்குமாா் உள்ளிட்ட ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT