திருப்பத்தூர்

2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வாணியம்பாடியை அடுத்த நடுப்பட்டரை கிராமத்தில் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வாணியம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வட்டாட்சியா் சம்பத் தலைமையில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை இரவு அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நடுபட்டரை கிராமத்தில் மயானப் பகுதியில் புதா் மண்டியிருந்த இடத்தில் 42 மூட்டைகளில் சுமாா் 2 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அரிசியை மீட்ட அதிகாரிகள், அவற்றை வாணியம்பாடியில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT