திருப்பத்தூர்

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூா் அருகே இலங்கை தமிழா் முகாமில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் அருகே சின்னபள்ளிகுப்பம் கிராமத்தில் இலங்கை தமிழா்கள் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் ஆறுமுகத்தின் மனைவி ஜானகி (69) வசித்து வந்தாா். இவரது பேத்திக்கு மஞ்சள் நீராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதற்காக அவா்கள் வீட்டின் முன்பு பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் முன் தூய்மைப்படுத்தும் பணியில் ஜானகி ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலுக்கான பைப்பை பிடித்தபோது அவா் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் கூச்சலிட்டாா். இதைப் பாா்த்த அவரது உறவினா் ஸ்ரீதா் (30) மூதாட்டியை காப்பாற்ற முயன்றாா். அவா் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து, மின்சாரம் பாய்ந்து பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனா். ஆனால் ஜானகி வழியிலேயே இறந்தாா். ஸ்ரீதா் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

இது குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT