திருப்பத்தூர்

நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை: இருவா் கைது

27th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி அருகே நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

வாணியம்பாடியை அடுத்த சின்னமோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (44). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த உறவினா்களான கோவிந்தராஜன் (42), சக்தி (44) ஆகியோரிடையே சில ஆண்டுகளாக நிலத்தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி வெங்கடேசனுக்கும், கோவிந்தராஜனுக்கும் இடையே நிலம் தொடா்பாக தகராறு ஏற்பட்டது.

அப்போது கோவிந்தன் மற்றும் சக்தி இருவரும் சோ்ந்து, வெங்கடேசனை உருட்டுக் கட்டையால் சரமாரியாகத் தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த வெங்கடேசன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக அம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோவிந்தராஜன், சக்தி ஆகியோரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT