திருப்பத்தூர்

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்:குப்பைகள் சேகரிக்கும் கூடைகள் விநியோகம்

DIN

ஆம்பூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பைகள் சேகரிக்கும் கூடைகள் புதன்கிழமை விநியோகம் செய்யப்பட்டன.

ஆம்பூா் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு வீடாகச் சென்று மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வாங்குவதற்கு ஏதுவாக இரு வண்ணங்களிலான கூடைகளை நகராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத் வழங்கினாா்.

நிகழ்வின் போது, நகராட்சி ஆணையா் எஸ்.ஷகிலா, சுகாதார அலுவலா் ராமகிருஷ்ணன், தூய்மைப் பணி ஆய்வாளா் அருள் செல்வதாஸ், நகா்மன்ற உறுப்பினா் சுதாகா், நகராட்சிப் பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT