திருப்பத்தூர்

கர்ப்பிணி பலி: மருத்துவரிடம் செல்போனில் கேட்டு செவிலியரே சிகிச்சை அளித்தாரா?

7th Jul 2022 02:29 PM

ADVERTISEMENT

திருப்பத்தூர்: வாணியம்பாடியில் இரட்டை பிரசவத்திற்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

மகப்பேறு மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்களே செல்போன் மூலம் மருத்துவரை தொடர்பு கொண்டு சிகிச்சையளித்ததால் பெண் உயிரிழந்ததாக கணவர் குற்றச்சாட்டியுள்ளார்.

வாணியம்பாடி காமராஜ்புரம்  பகுதியை சேர்ந்தவர் மதன் குமார் (20)கூலி தொழிலாளி இவரது  மனைவி சங்கரி (19) நிறைமாத கர்ப்பணியான இவர்  இன்று  அதிகாலை 4:30  மணியளவில் இரட்டை  பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க | எடப்பாடி பழனிசாமி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி

இதனை தொடர்ந்து பிரசவ சிகிச்சையின் போது  சிறிது நேரத்திலேயே  சங்கரி  உயிரிழந்துள்ளார்.

ADVERTISEMENT

இந்நிலையில் சங்கரியின்  உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுகூடி மகப்பேறு மருத்துவர் இல்லாமல்  பணியில் இருந்த செவிலியர்கள் மட்டுமே கர்ப்பிணிக்கு சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறி  மருத்துவமனை வளாகத்தை  முற்றுகையிட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் சங்கரியின் கணவன் மதன் அளித்த பேட்டியில்,

“காலை பிரசவத்திற்காக தனது மனைவி அனுமதித்த போது பிரசவ அறையில் நுழையும் போதே செவிலியர்கள் ஆயிரம் ரூபாய் கேட்டதாகவும், பின்னர் மருத்துவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டே தனது மனைவிக்கு பிரசவம் பார்த்ததால் தனது மனைவி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதையும் படிக்க | தமிழகத்தில் இன்றும், நாளையும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி நகர காவல்துறையினர் கர்ப்பிணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இந்நிகழ்வு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT