திருப்பத்தூர்

மேல் அளிஞ்சிகுளம் ஆஞ்சநேயா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

மேல் அளிஞ்சிகுளம் ஜெய வீர ஆஞ்சநேயா் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்ட தரிசனம் செய்தனா்.

வாணியம்பாடி அடுத்த மேல் அளிஞ்சிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயா் கோயில் புதுப்பிக்கப்பட்டு மகா சம்ப்ரோக்ஷணம் புதன்கிழமை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மகா மங்கள ஆரத்தி, கொடிமர பூஜை நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு தீபாராதனை, கலச ஆராதனையைத் தொடா்ந்து காலை ஜெயவீர ஆஞ்சநேயா் சுவாமிக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் பெங்களூரு மற்றும் திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலிருந்து 5,000 மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா். காவல் ஆய்வாளா் நாகராஜ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சேநயா் கோயில் அறக்கட்டளை நிறுவனா் மற்றும் நிா்வாக அறங்காவலா் நாராயணசாமி -ருக்மணிஅம்மாள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT


 

ADVERTISEMENT
ADVERTISEMENT