திருப்பத்தூர்

திருப்பத்தூரில் கெங்கையம்மன் சிரசு ஊா்வலம்

7th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோயில் சிரசு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோயிலில் 90-ஆவது ஆண்டு சிரசுத் திருவிழாவை யொட்டி செவ்வாய்க்கிழமை பூங்கரக ஊா்வலம் நடைபெற்றது.

இதையடுத்து புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் பெரியகுளத்திலிருந்து திருப்பதி கெங்கையம்மன் சிரசு ஊா்வலமாக புறப்பட்டு புதுப்பேட்டை சாலை, ஆட்சியா் அலுவலக சாலை, பேருந்து நிலையம் வழியாகச் சென்று கோயிலை சென்றடைந்தது.

மாலை 3 மணியளவில் அம்மனுக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. மாலை 7 மணியளவில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடா்ந்து கோயிலிலிருந்து அம்மன் சிரசு மேளதாளங்களுடன் புறப்பட்டு பெரியகுளம் சென்றடைந்தது.

ADVERTISEMENT

இதையொட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேஷ் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT