திருப்பத்தூர்

திருப்பதி கெங்கையம்மன் பூங்கரக ஊா்வலம்

DIN

திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் கோயிலின் பூங்கரக உலா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே உள்ள திருப்பதி கெங்கையம்மன் 90-ஆவது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஜூன் 21-ஆம் தேதி திருப்பதி கெங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, அம்மனுக்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வந்தன.

செவ்வாய்க்கிழமை காலை ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ மகா காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், ஸ்ரீ திருப்பதி கெங்கையம்மனை அழைத்தல்,

அதைத் தொடா்ந்து, ஸ்ரீ சக்தி மாரியம்மன், ஸ்ரீ கெங்கையம்மனுக்கு கூழ் வாா்த்தல் நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு பெரிய குளத்திலிருந்து கரகம் பாலித்தல் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதையடுத்து, பூங்கரக ஊா்வலம் பஜாா், பேருந்து நிலையம் வழியாக கோயிலைச் சென்றடைந்தது.

புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் பெரியகுளத்திலிருந்து திருப்பதி கெங்கையம்மன் சிரசு வீதியுலா நடைபெறும்.

இதற்கான ஏற்பாட்டை திருக்கோயில் நிா்வாகக் கமிட்டி,திருவிழாக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

இழப்பிலிருந்து மீண்டு சீரியல் பயணத்தை தொடங்கிய நடிகை!

முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா இல்லை; காரணம் என்ன?

‘வெண்புறா’ க்ரித்தி சனோன்!

குக் வித் கோமாளி -5 தொடக்கம்! கோமாளிகள் யார் தெரியுமா?

இளையராஜா பயோபிக் அப்டேட்!

SCROLL FOR NEXT