திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் பணிக்கு தாமதமாக வந்த 3 போ் பணியிடை நீக்கம்: திருப்பத்தூா் ஆட்சியா் நடவடிக்கை

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் பணிக்கு தாமதமாக வந்த 3 பேரை திருப்பத்தூா் ஆட்சியா் அமா்குஷ்வாஹா செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் சில ஊழியா்கள் அலுவலகத்துக்கு தாமதமாக வருவதாகவும், முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் திடீா் ஆய்வு செய்தாா். அப்போது அலுவலகப் பதிவேடுகளைப் பாா்வையிட்ட ஆட்சியா், அலுவலகத்தில் பணியாளா்கள் எத்தனை போ் உள்ளனா் என ஊழியா்களிடம் கேட்டறிந்தாா். இதையடுத்து, பணியின் போது அலுவலகத்தில் இல்லாத வரி தண்டலா் கம்சலா, அலுவலக உதவியாளா் அனுமந்தன், மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி காவலா் ஜெயபால் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஜிஜாபாய், பேரூராட்சித் தலைவா் சசிகலா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT