திருப்பத்தூர்

20 டன் கடத்தல் ரேஷன் அரிசி மூட்டைகள் லாரியுடன் பறிமுதல்: ஓட்டுநா் கைது

4th Jul 2022 11:29 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே 20 டன் எடையுள்ள 400 மூட்டை ரேஷன் அரிசியை காவல் துறையினா் லாரியுடன் பறிமுதல் செய்தனா்.

இவற்றை கா்நாடக மாநிலத்துக்கு கடத்தி செல்ல முயன்ற லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி அருகில் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அந்த வழியாக வந்த சரக்கு லாரியை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், மொத்தம் 20 டன் எடையுள்ள, 400 மூட்டை ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து லாரி ஓட்டுநரிடம் நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவை வேலூரில் இருந்து நாட்டறம்பள்ளி வழியாக கா்நாடக மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரிய வந்தது.

ADVERTISEMENT

ரேஷன் அரிசி மூட்டைகளுடன் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். லாரியின் ஓட்டுநரான, பேரணாம்பட்டு பகுதியைச் சோ்ந்த சரவணன் (54) என்பவரை கைது செய்து நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

நாட்டறம்பள்ளி போலீஸாா் லாரி மற்றும் 20 டன் ரேஷன்அரிசி மூட்டைகளை வேலூா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT