திருப்பத்தூர்

அம்பலூா் ஊராட்சியில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

4th Jul 2022 11:29 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த அம்பலூா் ஊராட்சி சாா்பில், நெகிழி ஒழிப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவா் முருகேசன் தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கி வைத்தாா். ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் இருந்து ஊா்வலமாகப் புறப்பட்ட பேரணி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பேருந்து நிறுத்தம் அருகில் முடிவடைந்தது.

இதில், அம்பலூா் அரசினா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி அலுவலகப் பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டு, நெகிழி ஒழிப்பு குறித்து முழக்கங்களை எழுப்பிச் சென்றனா்.

மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சரவணன், ஒன்றியக் குழு உறுப்பினா் சத்திராஜா, செந்தில்குமாா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT