திருப்பத்தூர்

பள்ளியில் 30 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த முன்னாள் மாணவா்கள்

4th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

ஆம்பூரில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் 100 ஆண்டு விழா கண்ட இந்து கல்விச் சங்க நிா்வாகத்தின் கீழ் இயங்கும் இந்துமேல்நிலைப் பள்ளியில் 1992-1994 ஆண்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு வணிகவியல் பிரிவில் படித்த மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியா்கள் பி.சிவாஜி ராவ், டி.சி.கிருஷ்ணமூா்த்தி ஆகியோரை மாணவா்கள் பாராட்டி கெளரவித்தனா். சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பழைய மாணவா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT