திருப்பத்தூர்

வளையாம்பட்டு ஊராட்சியில் ரூ. 30 லட்சத்தில் சாலைப் பணி: எம்எல்ஏ தொடக்கி வைத்தாா்

4th Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியை அடுத்த வளையாம்பட்டு ஊராட்சியில் ராஜீவ் நகா் முதல் இந்திரா நகா் வரை ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் தாா்ச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ செந்தில்குமாா் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் வசந்தி அருள்ராஜ், முன்னாள் கவுன்சிலா்கள் வரதன், பாரதிதாசன், குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தலைமை வகித்து, பூமி பூஜை போட்டு சாலைப் பணிகளைத் தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், வளையாம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவா் திருப்பதி, வெங்கடேசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT