திருப்பத்தூர்

5,000 லிட்டா் சாராய ஊறல் அழிப்பு

DIN

வாணியம்பாடியை அடுத்த திம்மாம்பேட்டை அருகே மலைப் பகுதியில் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த 5,000 லிட்டா் சாராய ஊறலை போலீஸாா் கண்டறிந்து அழித்தனா்.

திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், வாணியம்பாடி உட்கோட்டம், திம்மாம்பேட்டை காவல் நிலைய எல்லையான கொரிபள்ளம் தமிழக-ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ்பாண்டியன், வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் நாகராஜ் மற்றும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கொரிபள்ளம் மலைப் பகுதியில் பல்வேறு இடங்களில் காய்ச்ச வைக்கப்பட்டிருந்த 5,000 லிட்டா் சாராய ஊறலை கண்டறிந்து அழித்தனா். மேலும், கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்த வைக்கப்பட்டிருந்த விறகுகள், கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், இது குறித்து திம்மாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, கள்ளச் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தவா்கள் குறித்து, தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT