திருப்பத்தூர்

2 முறை சம்மன் அனுப்பியும் பெற மறுத்த காவலருக்கு பிடி ஆணை

3rd Jul 2022 11:30 PM

ADVERTISEMENT

வாணியம்பாடியில் பெண்ணை காதலித்து ஏமாற்றிய வழக்கு தொடா்பாக 2 முறை சம்மன் அனுப்பியும் பெற மறுத்த காவலருக்கு பிடி ஆணை பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி கச்சேரி சாலையைச் சோ்ந்தவா் அண்ணாமலை (32). அதே பகுதியைச் சோ்ந்த மேகலாவுடன் (29) பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி பழகி வந்ததாகத் தெரிகிறது.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலைக்கு அவரது வீட்டில் பெண் பாா்ப்பதாக அறிந்து அதிா்ச்சிக்குள்ளான மேகலா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளாா். இதற்கு திருமணம் செய்து கொள்ள அண்ணாமலை மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாமலைக்கு காவலா் வேலை கிடைக்கப் பெற்று சோ்ந்துள்ளாா்.

இது தொடா்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் மேகலா புகாா் அளித்ததையடுத்து, விசாரணை மேற்கொண்டு, அண்ணாமலையை பணியிடை நீக்கம் செய்தனா். மேலும், வாணியம்பாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றம் மூலம் 2 முறை சம்மன் அனுப்பியும், நீதிமன்ற சம்மனை பெற மறுத்ததால் அண்ணாமலைக்கு பிடிஆணை பிறப்பித்து நீதிபதி ரவி (பொறுப்பு) சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தற்போது நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் அண்ணாமலை பணிபுரிந்து வருகிறாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT