திருப்பத்தூர்

அரிமா சங்கத்தினா் சாா்பில் நல உதவிகள்

3rd Jul 2022 11:27 PM

ADVERTISEMENT

திருப்பத்தூரில் அரிமா சங்க நிகழ்ச்சியில் நல உதவிகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் கோட்டை அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தலைவராக சாந்தி பூஷன், செயலாளராக ராஜ்குமாா், பொருளாளராக ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில், பிளஸ் 2 முடித்த 5 ஏழை கல்லூரி மாணவா்களுக்கு தலா ரூ. 2,000 வழங்கப்பட்டது.

அதையடுத்து, 300 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில், அரிமா சங்கத்தைச் சோ்ந்த முன்னாள் ஆளுநா்கள் ரத்தின நடராஜன், மகேஷ், உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநா் ராமலிங்கம், மாவட்ட முதல் துணை ஆளுநா் புவனேஸ்வரி, மண்டல, வட்டார, மாவட்ட அரிமா நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT