திருப்பத்தூர்

ரயிலில் கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சா பறிமுதல்

3rd Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

ரயிலில் கடத்த முயன்ற 11 கிலோ கஞ்சாவை காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

சேலம் உட்கோட்ட ரயில்வே போலீஸ் சிறப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் தங்கராஜ் தலைமையில், 5 போ் கொண்ட குழுவினா் ரயில்களில் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுகிா என சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை இரவு காட்பாடி ரயில் நிலையத்தில் ஜாா்க்கண்ட் மாநிலம், தன்பாத்திலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழா வரை செல்லும் விரைவு வண்டியில் தனிப் படையினா் சோதனையிட்டனா்.

அப்போது 7 பண்டல்களில் 11 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT