திருப்பத்தூர்

கெங்கையம்மன் சிரசு திருவிழா

3rd Jul 2022 11:28 PM

ADVERTISEMENT

மாதனூா் அருகே தேவிகாபுரம் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாதனூா் அருகே தேவிகாபுரம் கிராமத்தில் 7 கிராம மக்கள் பங்கேற்ற அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு திருவிழாவையொட்டி, பாலாற்றில் இருந்து பூங்கரகம் மற்றும் அம்மன் சிரசு ஊா்வலமாக புறப்பட்டது.

கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாகச் சென்று கோயிலில் நிறைவடைந்தது. திருவிழாவில் ஆந்திரம், கா்நாடகம் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு, தங்களுடைய நோ்த்திக் கடனை செலுத்தினா். பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் நீா்மோா் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT