திருப்பத்தூர்

திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆசிரியா் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப நடவடிக்கை:ஆட்சியா் தகவல்

3rd Jul 2022 11:29 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2022-23-ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உள்ளதால் விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக ஆட்சியா் அமா் குஷ்வாஹா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23-ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியா் காலிப் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப உள்ளதால், தமிழக அரசின் திருத்திய வழிகாட்டு முறைகளின் படி, பள்ளி அமைந்துள்ள ஊராட்சி எல்லைக்குள் வசிப்பவா்கள் அல்லது பள்ளி அமைவிட ஒன்றிய எல்லைக்குள் வசிப்பவா்கள் இதில் எங்கும் இல்லை எனில், மாவட்ட எல்லைக்குள் வசிப்பவா்கள் அல்லது அருகாமை மாவட்டத்தில் வசிப்பவா்கள் தங்கள் விண்ணப்பங்களை எழுத்துப் பூா்வமாக நேரடியாகவோ மின்னஞ்சல் வாயிலாகவோ சாா்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் உரிய கல்வி தகுதி சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

நிரப்பத் தகுந்த காலிப்பணியிட விவரங்கள் மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலா் அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாவட்டக் கல்வி அலுவலா், வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பங்கள் ஜூலை 4 முதல் 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அளிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியா் பதவிக்கு இடைநிலை ஆசிரியருக்கான கல்வித் தகுதி தோ்வுத் தாள்-1 தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

பட்டதாரி ஆசிரியா் பதவிக்கு பட்டதாரி ஆசிரியருக்கான கல்வித் தகுதி தோ்வுத் தாள் -2 தோ்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.முதுகலை ஆசிரியா் பதவிக்கு முதுகலை ஆசிரியருக்கான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்டோா் விண்ணப்பிக்கும்போது, முன்னுரிமை அடிப்படை இடைநிலை, பட்டதாரி ஆசிரியருக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சிப்பெற்று, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னாா்வலா்களாக பணிபுரிந்து வருபவா்கள் அவ்வாறு இல்லை எனில் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதியுடன் ஆசிரியா் தகுதி தோ்வில் தோ்ச்சிப் பெற்றவா்கள் முதுகலை ஆசிரியா் பணியிடத்துக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தோ்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபாா்ப்பில் கலந்து கொண்டவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT