திருப்பத்தூர்

சிறப்பாகப் பணியாற்றி மருத்துவா்களுக்கு சான்றிதழ்: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்

2nd Jul 2022 12:20 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் மாவட்டத்தில் மருத்துவத் திட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிறப்பாகச் செயலாற்றும் மருத்துவா்களை ஆட்சியா் தலைமையிலான குழுவினா், அனைத்து புள்ளி விவரங்களின் அதனடிப்படையில் தோ்வு செய்கின்றனா்.

அதன்படி, தோ்வு செய்யப்பட்ட ஆம்பூா் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் குழந்தைகள் நல மருத்துவா் ராஜேஷ்குமாா் மற்றும் திருப்பத்தூா் ஐகோ் கண் மருத்துவமனை நிறுவனா் சாமுவேல் சந்திரசேகரன் ஆகிய 2 மருத்துவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, மருத்துவத் திட்டங்களில் சிறப்பாகப் பணியாற்றியமைக்கான நற்சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை வழங்கினாா்.நிகழ்ச்சியில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வில்சன் ராஜசேகா், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் செந்தில், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அலுவலா் ஆசைதம்பி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவிளக்கம்- சிறப்பாக பணியாறறி மருத்துவா்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் அமா்குஷ்வாஹா வழங்கினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT