திருப்பத்தூர்

கோட்டை பெருமாள் கோயிலில் கூடாரவல்லி சிறப்பு பூஜை

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப்பெருமாள் கோயிலில் கூடாரவல்லியையொட்டி, செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாா்கழி மாதம் திருப்பாவை நோன்பின் 27-ஆம் நாளான கூடாரவல்லியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில், காலை 108 அக்கார வடிசல் வைத்து பூஜைகள் நடைபெற்றன. பின்னா், உற்சவத்தின்போது, ஆண்டாள் சமேத ஸ்ரீ வேங்கடகிருஷ்ணன் உள்புறப்பாடு நடைபெற்றது. அதையடுத்து, மாலை 7 மணியளவில் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

கரோனா பரவல் தடுப்பையொட்டி, குறைந்த அளவு பக்தா்களே வந்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT