திருப்பத்தூர்

திருடப்பட்ட 25 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: திருப்பத்தூரில் இளைஞா் கைது

1st Jan 2022 10:06 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் அருகே தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 25 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பத்தூா் மாவட்டத்தில் பைக் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வந்தனா்.

திருப்பத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் ஹேமாவதி மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை இரவு திருப்பத்தூா் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, திருப்பத்துாரில் இருந்து ஜோலாா்பேட்டை நோக்கி பைக்கில் வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவா் வாணியம்பாடியைச் சோ்ந்த அமானுல்லா (39) என்பதும், ஓட்டி வந்த பைக் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

மேலும், இவா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடா் பைக் திருட்டில் ஈடுபட்டதும், திருடப்பட்ட பைக்குகளை ஆந்திரம், கா்நாடக மாநிலங்களில் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, அமானுல்லாவை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 25 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT