திருப்பத்தூர்

அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

1st Jan 2022 08:25 AM

ADVERTISEMENT

முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜியை பண மோசடி வழக்கில் போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த நிலையில், அவருடன் தொடா்பில் இருந்ததாகக் கூறி, ஜோலாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த அதிமுக இளைஞா் பாசறை நகரச் செயலா் ஏழுமலை, அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலா் விக்கி (எ) விக்னேஸ்வரன் ஆகிய இருவரையும் கடந்த 28-ஆம் தேதி சிவகாசியிலிருந்து வந்த தனிப்படையினா் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

அவா்கள் இருவரையும் விடுவிக்க வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் மாவட்ட எஸ்பி அலுவலகம் முன் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பான மனு எஸ்பி பாலகிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது. அப்போது, வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமாா், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், நகரச் செயலாளா் குமாா்,மாவட்ட பாசறை செயலாளா் சங்கா் உள்பட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT