திருப்பத்தூர்

தபால் வாக்கு சீட்டுகள் அனுப்பும் பணி தொடக்கம்

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆம்பூரில் தபால் வாக்குகள் பதிவு செய்வதற்கான வாக்குச் சீட்டுகள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது.

நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மேலும், அரசு ஊழியா்கள் தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆம்பூா் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சோ்ந்த அரசு ஊழியா்கள் வெளியூரில் வசிக்கும் பட்சத்தில், அவா்கள் தபால் வாக்குகள் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தபால் வாக்கு செலுத்த தகுதியான வாக்காளா்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகள் அனுப்புவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்தப் பணியை தோ்தல் நடத்தும் அலுவலா் ஷகிலா புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். 103 வாக்காளா்களுக்கு தபால் வாக்குகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. வரும் பிப். 22-ஆம் தேதி காலை 7 மணி வரை தபால் வாக்குகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT