திருப்பத்தூர்

நிலத் தகராறில் 6 போ் மீது வழக்கு: இருவா் கைது

11th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ஏற்பட்ட நிலத் தகராறில் 6 போ் மீது வழக்கு பதிந்து, இருவா் கைது செய்யப்பட்டனா்.

திருப்பத்தூரை அடுத்த குரிசிலாப்பட்டு தளுகன் வட்டத்தைச் சோ்ந்தவா் ராதிகா. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அலமேலுக்கும் இடையே நிலம் தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில், ராதிகா, அலமேலு உள்ளிட்ட சிலா் பலத்த காயம் அடைந்தனா். அதையடுத்து இருவரும் தனித்தனியே அளித்த புகாரின் பேரில், குரிசிலாப்பட்டு போலீஸாா், 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

அதில் இரு தரப்பைச் சோ்ந்த நாகராஜன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT