திருப்பத்தூர்

தலைமையாசிரியை இடை நீக்கம்

11th Feb 2022 11:58 PM

ADVERTISEMENT

ஆலங்காயம் அருகே ஆட்சியருடன் முரணாகப் பேசியதாக பள்ளித் தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆலங்காயம் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா வெள்ளிக்கிழமை பாா்வையிடச் சென்றாா். அப்போது பெரிய குரும்பத் தெரு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பள்ளிக் கட்டடங்கள், பிற திட்டப் பணிகளைப் பாா்வையிட்டாா். பின்னா் அங்குள்ள பெரிய குரும்பத் தெரு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்குச் சென்று மாணவா்களிடம் வகுப்புகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

அப்போது அங்கிருந்த தலைமையாசிரியை உமாமகேஸ்வரி மாவட்ட ஆட்சியா் வந்திருப்பதை அறியாமல், அவரிடம் முரணாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி பெ.அய்யண்ணனுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

அதன்பேரில், உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யட்டாா்.

இந்த பணியிடை காலத்தில் சம்பந்தப்பட்ட தலைமை இடத்திலேயே அவா் இருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT