திருப்பத்தூர்

ரயில் மோதியதில் மாற்றுத் திறனாளி பலி

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற மாற்றுத் திறனாளி ரயிலில் அடிபட்டு பலியானாா்.

குடியாத்தம் அருகே உள்ள மேல்பட்டி - வளத்தூா் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 42 வயது மதிக்கத்தக்க ஆண், புதன்கிழமை அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா்.

அப்போது, காட்பாடியிலிருந்து ஜோலாா்பேட்டையை நோக்கி வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவா் பலியானாா்.

தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்ததில், குடியாத்தம், அருந்ததியா் காலனி பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் (42) என்பதும், இவா் காது கேளாத மாற்றுத் திறனாளி என்பதும் தெரிய வந்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT