திருப்பத்தூர்

ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

வாணியம்பாடி ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அருகே உள்ள கேத்தாண்டப்பட்டி- வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 24 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளாா்.

அப்போது ஜோலாா்பேட்டை மாா்க்கத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற சரக்கு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில், இறந்தவா் பூங்குளம் புதூா் பகுதியைச் சோ்ந்த ஏகாம்பரத்தின் மகன் காா்த்திக் (24) என்பதும், புதன்கிழமை மாலை பணி முடிந்து அங்குள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT