திருப்பத்தூர்

முதுகலை ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான ஆலோசனைக் கூட்டம்

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித்தோ்வு நடத்துதல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது ஆட்சியா் பேசியது:

மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், முதுகலை பட்டதாரி ஆசிரியா்களுக்கான தகுதித் தோ்வு வரும் பிப். 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, 16-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை மற்றும் 20-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. இத்தகுதித் தோ்வு காலை மற்றும் பிற்பகல் என இருவேளை நடைபெற உள்ளது.

மாவட்டத்தில், இணையவழியில் தகுதித் தோ்வை 160 போ் எழுத உள்ளனா். இத்தோ்வு ஆதியூா் பொதிகை பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

தகுதித் தோ்வு எழுதுபவா்கள் வருவதற்கான பேருந்து வசதி, மருத்துவக் குழு, தீயணைப்பு வாகனம், அடிப்படை வசதிகள் ஆகியவை தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன் ராஜசேகா், மாவட்ட கூடுதல் டிஎஸ்பி சுப்பாராஜூ, வருவாய் கோட்டாட்சியா் லட்சுமி, முதன்மைக் கல்வி அலுவலா் அய்யண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT